×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஜல்லிக்கட்டுப் போராட்டம் - ஏமாறும் தமிழர்கள், குளிர்காயும் தீய சக்திகள் Featured

Monday, 23 January 2017 14:17 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழ்ப் பண்பாடு காக்க தமிழ்ச் சொந்தம் அனைத்தும் வீதிக்கு வந்தது ! தமிழையும் பண்பாட்டையும் பேணி காக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள் வரவேற்பார்கள் ! ஆதரிப்பார்கள் ! 

இந்த அடிப்படையில், இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதோடு மட்டுமின்றி பல உதவிகளும் செய்தோம். இந்தப் போராட்டம் இன்று மொழியையும் பண்பாட்டையும் முன் எடுத்துச் செல்ல வந்த இளைஞர்களை தடம் மாற்றி ஜல்லிக்கட்டைத் தடுக்கும் போராட்டமாக சில தீய சக்திகள் மாற்றி வருகின்றனர்.

அலங்காநல்லூரில் வளர்க்கும் காளைகளை வாடிவாசலில் விட்டால் போதும் என்று கோரிக்கையுடன் தொடங்கிய மாணவர் போராட்டம் இன்று ஜல்லிக்கட்டு நடப்பதையே தடுத்துவிட்டது. 2006 முதல் ஜல்லிக்கட்டுக்காகப் போராடி வருபவர்கள் போராட்ட வெற்றி அறிவிப்பு வெளியிட்ட பின்னும், அவர்களைத் தூற்றிவிட்டு போராட்டத்தைத் தூண்டி விடும் தீய சக்திகள் யார் ? அவர்கள் நோக்கம் என்ன ?

26 ஜுலை 2016 அன்று ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால், ஜல்லிக்கட்டு முடங்கிவிட்டது, அதை நடத்த வேண்டும் என்ற நியாயமான அடிப்படை உரிமையைக் கோரியது இந்தப் போராட்டம் !

ஜல்லிகட்டை உச்சநீதிமன்றம் தடை செய்ய ஆணை பிறப்பித்தவுடன் ஜல்லிக்கட்டுப் பேரவையைச் சார்ந்த திரு.ராஜசேகர், திரு.கார்த்திகேய சேனாபதி மற்றும் பல நண்பர்கள் நீதிமன்றத் தடையை முறியடிக்க மத்திய அமைச்சர் திரு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவியுடன் தடையை நீக்க மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ”ஜல்லிக்கட்டு 5000 ஆண்டுகால பாரம்பரியமாக இருந்தால் என்ன?” என்று தடை விதிக்கும் போக்கிலே வழக்கைக் கொண்டு சென்றார்.

http://www.ndtv.com/tamil-nadu-news/jallikattu-5000-years-old-so-what-supreme-courts-sharp-remarks-on-bull-fest-1436227

இந்தச் சூழலில் திரு.சுப்பிரமணிய சாமியின் வரவு, வழக்கின் போக்கை மாற்றியது. பிரியாணிக்காக மாடுகளை வெட்டுவது விலங்குகளுக்கு எதிரான கொடுமை இல்லை என்றால் ஜல்லிக்கட்டு எப்படி கொடுமையாகும் என்று தன் வாதத்தை தொடங்கினார். அதிர்ந்து போன நீதிபதிகள், திரு. சுப்பிரமணிய சாமியின் வாதத்தை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டனர்.
http://www.deccanchronicle.com/nation/current-affairs/230117/if-jallikattu-is-animal-cruelty-then-ban-halal-meat-subramanian-swamy.html

hallal

ஜல்லிக்கட்டு அடிப்படை, மத உரிமை, பல்லாயிரம் ஆண்டுகால பண்பாட்டு பின்னணியைக் கொண்டது, நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வரும் அறிவியல்பூர்வமான கிராமிய வாழ்க்கை முறைக்கும் ஜல்லிக்கட்டிற்கும் உள்ள தொடர்பு, மோடியின் மத்திய அரசின் ஜனவரி 7, 2016 ஆம் ஆண்டு ஆணையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுத் தடை செல்லாது என்று பண்பாடு மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மறுக்க முடியாத வாதங்களை 14 டிசம்பர் 2016 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

samy arugment

To View Mr. Swamy's Argument 

இந்நிலையில் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணத்தின் வாயிலாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அ.தி.மு.க கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் திருமதி.சசிகலா நடராஜன் அவர்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் திரு.பன்னீர்செல்வத்தை ஆட்சியிலிருந்து இறக்க ஒரு வலுவான காரணம் தேவைப்படுகிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் திரு.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு கடுமையாகச் சரிந்தால் சுலபமாக திருமதி. சசிகலா நடராஜன் முதல்வராகி விடலாம்.

தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலினுக்கும் ஆதரவான சூழல் இல்லை. இந்தப் போராட்டத்தை மையப்படுத்தி தி.மு.க ஆட்சிக்கட்டிலுக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும். திருமதி. சசிகலாவின் கணவர் திரு.நடராஜன் அவர்களுக்கும் தி.மு.க விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிந்ததே.

இந்த வலுவற்ற அரசியல் சூழ்நிலையில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர் பிரிவினைவாத சக்திகள் ! இந்த சக்திகளின் குரலை எதிரொலித்தது ஜனவரி 2017 அண்டு நடந்த

திரு.நடராஜன் அவர்களின் புதிய பார்வை மற்றும் அவரது ஆதரவு அமைப்புக்களின் விழாக் கருத்துரைகள்.
https://soundcloud.com/vsrc/natarajan-speaks-against-india

பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் அறிகுறி இல்லாததால் ஐந்து காளைகளையாவது வாடிவாசல் வழியாக விட வேண்டும் என்று அலங்காநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தச் சூழலில் ஜல்லிக்கட்டுத் தீர்ப்பை விரைந்து வழங்குமாறு மத்திய அரசும், ஜல்லிக்கட்டுக்காக வழக்குத் தொடர்ந்தவர்களும் நீதிபதியிடம் ஜனவரி 13 , 2017 அன்று வேண்டுகோள் விடுக்க, பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க முடியாது என்று தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதி அடங்கிய அமர்வு அறிவித்தது. இந்தத் தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதியின் அறிவிப்பே இந்தப் போராட்டத்திற்கு காரணமானது. இந்தச் சூழலை ஏற்படுத்திய தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதி தான் 2006 ஆம் ஆண்டு ரேக்ளாப் போட்டி வழக்கில், தொடர்பே இல்லாத ஜல்லிக்கட்டைச் சேர்த்து தடை விதித்து பண்பாட்டுப் படுகொலையைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://timesofindia.indiatimes.com/india/supreme-court-turns-down-plea-to-allow-bull-taming-sport-jallikattu-before-pongal/articleshow/56494779.cms
http://www.thehindu.com/news/cities/Madurai/Lawyer-reminisces-the-day-jallikattu-was-banned-first/article17039812.ece
image bANUMATHI

இந்த நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்காத நீதிமன்றத்தின் நடவடிக்கை யாருக்குத்தான் கோபத்தை ஏற்படுத்தாது?

அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 13, 2017 இரவு, கிறிஸ்தவ நிர்வாகத்தில் இயங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முதலில் களத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புக்களும், நக்சல் ஆதரவு அமைப்புக்களும், தனித் தமிழ் தேசியம் பேசும் அமைப்புக்களும் களமிறங்கின. இந்த நாள் தான், இந்தப் போராட்டத்தில் தீய சக்திகள் ஊடுருவிய முதல் நாள்.

பல்லாயிரமாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தடைப்பட்டது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டும், பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து மாணவர் போராட்டம் வலுப்பெற்றது.

அ.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் ஆதரவான சூழ்நிலை இல்லாத காரணத்தால், இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகளால் நேராகக் களமிறங்க முடியவில்லை. இந்நிலையில் தனித் தமிழ் தேசியம் பேசும் மே 17 இயக்கம், கிறிஸ்தவ ஆதரவு என்.ஜி.ஓ க்கள் போராட்டக்களத்தில் பெருமளவில் ஊடுருவத் தொடங்கினர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வேண்டும் என்று மாறியது. இந்தக் கோரிக்கையை ஏற்காத நரேந்திர மோடி இந்த கும்பல்களால் குற்றவாளியாக்கப்பட்டார். இந்த ஊடுருவல் போராட்டக்காரர்கள் இந்தக் கோரிக்கையை மாணவர்களின் கோரிக்கையாக்கினர். இவர்களுக்கு சில ஊடகங்களும் துணை நின்றன. இந்தப் போராட்டக்காரர்களின் கோரிக்கையான அவசரச் சட்டம் 7 ஜனவரி 2016 ல் மோடியின் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, அதை உச்ச நீதிமன்றம் 14 ஜனவரி 2016ல் தடை செய்து, இப்போது அந்தத் தடையை எதிர்த்து மோடி அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மோடி அரசால் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெற முடியுமானால் ஏன் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கொண்டுவர முடியாது என்ற கேள்வியை எழுப்பி, மாணவர்களைத் திசை திருப்பினர் ஊடுருவிகள். இந்தப் போராட்டத்தின் முதல் அரசியல் பொய் இது தான். ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை சட்டம் கொண்டு வராமல் ஏமாற்றுகிறது என்று திசை திருப்பிய அமைப்புக்கள் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளி, மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம் என்று போராட்டத்தின் போக்கை இந்த ஊடுருவிய அமைப்புக்கள் மாற்றின.

இந்த ஊடுருவல்களுக்கிடையே மாட்டுப் பொங்கலையும் ஜல்லிக்கட்டையும் வசைபாடும் இஸ்லாமிய அமைப்புக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்களின் பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டுப் பழிப்புரைகளைக் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=zEHkXI1_EiU

இந்த தவ்ஹீத் ஜமாத் ஜனவரி 18 2017 அன்று மாற்றுமத நண்பர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாசிசக் கொள்கையை புரிந்து கொண்டு விட்டனர். அதனால் ஆதரவளிக்க வேண்டும் என்று இஸ்லாமியருக்கு அழைப்பு விடுத்தது.

towheed jamad

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்பினர்கள், போராட்டம் நடக்கும் இடங்களில் புகுந்து தண்ணீர் கொடுப்பது, சுத்தம் செய்வது, போக்குவரத்தை சீர் செய்வது போன்ற சேவைகளைச் செய்து கொண்டே, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராகத் தூண்டினர். ஜனவரி 20 2017 போராட்ட இடமான மெரினாக் கடற்கரையில் தொழுகை நடத்தினர். இதைப் பெரிய கூட்டமாக காட்சிப்படுத்த பல முஸ்லீம்களை அன்று மதியம் திரட்டினர்.

namaz


இந்த நமாசும் திட்டமிட்டு நடத்தப்பட்டதே ! அசார் முகமது என்ற முஸ்லீமின் பதிவைப் பாருங்கள் ! ஜல்லிக்கட்டு இஸ்லாமியர்களுக்கு எதிரானது, இருப்பினும் அரசியல் ஆதாயத்திற்காகவும், மதத்தைப் பரப்புவதற்காகவும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை பயன்படுத்த முஸ்லீம்களை சமூக வலைத்தளம் மூலம் திரட்டுகின்றனர். மோடிக்கு எதிராக பிரச்சாரத்தைத் திருப்பவும் முஸ்லீம்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதை செய்து வருவதாக அஜ்மல் என்பவர் பதில் அளிக்கிறார்!

image muslim

போலீஸையும் இராணுவத்தையும் அரை மணி நேரம் ஒதுங்கச் சொல்லுங்கள் அனைத்து இந்துக்களையும் கொன்று விடுவோம் என்று முழங்கிய ஹைதராபாத் முஸ்லீம் தலைவர் அசாவுதின் ஒவைசியின் அண்ணனும் மஜிலீஸ் கட்சியின் தலைவருமான அசாவுதீன் ஒவைசி, ஜல்லிக்கட்டை எதிர்ப்பார் ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆதரிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் ஹிந்துத்துவ சக்திகளுக்கு எதிரானது என்கிறார் அசாவுதின் ஒவைசி

http://www.newindianexpress.com/nation/2017/jan/20/jallikattu-row-a-lesson-for-hindutva-forces-says-owaisi-1561619.html


image owaisi

இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பினரின் வரவால் பலமடைந்த தனித்தமிழ் தேசியம் பேசும் பிரிவினைவாதிகள் மாணவர்களை இந்தியாவிற்கு எதிராக கோஷமிடத் தூண்டினர். இந்தக் கூட்டத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் ஊடுருவிய தி.மு.க காரர்கள் இந்தப் போராட்டத்தை மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டமாக திசை திருப்பினர். இந்தப் போராட்டத்தில் கோஷமிடும் இந்தப் பெண்ணுடன் நிற்பவர் தி.மு.க காரர் லோகேஷ் !
lokesh and stalin


இந்த கோஷம் போடும் பெண் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்புகின்றனர். இந்தப் பெண்ணோ நான் மதுரைக்காரி, எனக்கு அரசியல் சார்பு இல்லை என்று பேட்டி கொடுக்கிறார் !

death message

இந்தப் போராட்டத்தை அரசியலாக்கிய தி.மு.க ஊடுருவிகளை அடையாளம் காணுங்கள் !

dmk party men 1

 

dmk party men 2


இந்நிலையில் 21 ஜனவரி 2017 அன்று மத்திய அரசு உதவியுடன் மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இன்று (22 ஜனவரி 2017) பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது ஆனால் அலங்காநல்லூர் மற்றும் சில ஊர்களில் போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவில்லை. இப்போது அவர்களின் கோரிக்கை ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு !

நிரந்தரத் தீர்வுக்கு கால அவகாசம் வேண்டும் என்பதால் போராட்டத்தை நீட்ட கோரிக்கையை மாற்றி இளைஞர்களை உசுப்பேத்தி இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராகப் போராட்டத்தை வழி நடத்திச் செல்கின்றனர் இந்த ஊடுருவல்காரர்கள். இந்தப் போராட்டம் தொடர சமூக வலைத்தளங்களில் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். போராட்டத்தில் அரசு வன்முறையைத் தூண்டுகிறது அதைச் சமாளிக்க வழக்கறிஞர் குழு தயாராக உள்ளதாக சமூக வலைதளத்தில் பிரச்சாரம் வேறு! இந்தப் பட்டியலை நன்றாகப் பாருங்கள். இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்!

advocATE


advocATE 1

advocATE 2

அரசியலுக்காக ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குச் செல்கிறோம் என்று சொல்லும் கூட்டம் எவ்வளவு தந்திரமாக வேலை செய்கிறது என்பதைப் பாருங்கள்!

ஜல்லிக்கட்டு வேண்டும், பீட்டா தடை செய்யப்பட வேண்டும், நாட்டு மாடுகள் காக்கப்பட வேண்டும் என்று ஒலித்த போராட்டக் களத்தில் இன்று இந்தியா ஒழிக, மோடி ஒழிக என்ற கோஷங்கள் முழங்கும்படி போராட்டத்தின் போக்கை மாற்றி அதைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர் ஊடுருவல்காரர்கள். இந்தியா வெளியேறு, தனித் தமிழ் நாடு வேண்டும், தனி ஈழம் வேண்டும் என்ற பிரிவினைவாதக் குரல்கள் ஊடுறுவல்காரர்களின் தூண்டுதலால் ஒலிக்கின்றது. இதை பாதாகைகளாகவும் போராட்டக் களத்தில் நம்மால் காண முடிகிறது.

anti nation1

anti nation2

 

anti national 3

anti national 4

IMG 20170123 WA0209

 

IMG 20170123 WA0210

IMG 20170123 WA0211

IMG 20170123 WA0213

IMG 20170123 WA0214

IMG 20170123 WA0215

IMG 20170123 WA0216

 

ஜல்லிக்கட்டையும் பண்பாட்டையும் ஆநிரையையும் காக்கக் களமிறங்கிய மாணவர்களின் பெயரில் இன்று ஊடுருவல்காரர்களின் தூண்டுதலால் ஜல்லிக்கட்டு தடுக்கப்பட்டிருக்கிறது என்பது இந்தப் போராட்டம் தடம் புரள்வதைக் காட்டுகிறது.

இந்தப் போராட்டத்தை நீட்டிக் கொண்டு போக வேண்டும் புதிய புதிய கோரிக்கைகளை வைத்து பொய் பிரச்சாரங்கள் வாயிலாக மாணவர்களை திசை திருப்பி பிரிவினைவாதத்துக்கு தமிழகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர் ஊடுருவல்காரர்கள். திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் வ உ சி, பாரதி, வீரமங்கை வேலு நாச்சியார், பசும்பொன் தேவர் திருமகனார், கட்டபொம்மன், வீர வாஞ்சிநாதன் பிறந்த மண்ணில் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என்ற கோஷத்தை முன்வைக்க இந்த மாணவர் போராட்டத்தை லாவகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பதிவில்
//இனிமேல் எப்படி இந்தியனாக இருக்க முடியும்!, எனது நாடு தமிழ் நாடு, இந்திய அரசே வெளியேறு ! இந்தியக் கொடி மரத்தில் இன் தமிழ்க் கொடி மட்டுமே பறக்கட்டும் ! தமிழ்த்தாய் வாழ்த்தே இனி நம் தேசிய கீதம் ! //என்று பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். இவரின் அமைப்பின் வலைத்தளம் போராட்டக்காரர்களிடையே திட்டமிட்டு பிரபலப்படுத்தப்படுகிறது.

thirumurgan gandhi


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களைத் தூண்டி தனித் தமிழ் தேசியம் பேசி போராட்டத்தை நடத்தியவர்கள் கோடிகளைச் சம்பாதித்தனர் ஆனால் தமிழ் தெருக் கோடிக்கு வந்துவிட்டது. 1967 க்குப் பின் தமிழும், தமிழ் வழிக் கல்வியும் என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும், பாரதியும் இன்று தனித் தமிழ் தேசியம் பேசிய சித்தாந்தக்காரர்கள் ஆட்சியில் காணாமல் போய்விட்டார்கள் என்பது வரலாறு.

அரசியல் இல்லை ! அரசியல் இல்லை என்ற மாணவர் போராட்டம் மாணவர்களுக்குத் தெரியாமலேயே அரசியலாக்கப்பட்டுவிட்டது.!

இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகிறது:-

  • ஜல்லிக்கட்டை நடத்துவதை நோக்கமாகக் கொண்ட போராட்டம் ஜல்லிக்கட்டை ஏன் தடுக்க வேண்டும் ?
  • நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் மாட்டிறைச்சி தின்பவனுக்கு என்ன வேலை ?
  • தமிழர் பண்பாடு காக்கும் போராட்டத்தில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லும் கூட்டம் ஏன் வர வேண்டும் ?
  • அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர் போராட்டத்தில் தனித் தமிழ் நாடு கோருபவர்கள் ஏன் வர வேண்டும்?
  • ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கூட்டம் 2016 லேயே ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்த நரேந்திர மோடியை ஏன் பழிக்க வேண்டும் ?
  • 2006 இல் ஜல்லிக்கட்டைத் தடை செய்தது மட்டுமின்றி, 2017 பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தீர்ப்பு வழங்க முடியாது என்று அறிவித்த தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதியை விமர்சிக்காதது ஏன் ?

ஜல்லிக்கட்டைத் தடை செய்தது தமிழ் பேசும் கிறிஸ்தவர் பானுமதி!

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்தச் சட்டம் கொண்டு வந்தது இத்தாலிய கிறிஸ்தவரான சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ்!

ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வழக்குத் தொடர்ந்தது அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் பீட்டா!

ஜல்லிக்கட்டை ஒழித்த பீட்டா நிறுவனத்தின்  2015 ஆண்டின் சிறந்த மனிதர் கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கு!

peta pope

22 ஜனவரி 2017 ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் போட்டபின் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்காமல் தடுத்த போராட்டத்தைத் தூண்டியது கிறிஸ்தவ நிர்வாகத்தில் இயங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்!

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள் இன்று இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வரவிடாமல் தடுத்து ஜல்லிக்கட்டைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஐந்து காளைகளை வாடிவாசலில் விடக் கோரிய போராட்டம், முழு வீச்சில் சட்டத்தின் துணையுடன் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டைத் தடுத்து நிறுத்தியுள்ளது. தீய சக்திகளின் அரசியல் சூழ்ச்சியால் போராட்டத்தின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு மாணவர்கள் அபாயகரமான பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் தருவாயில், இந்தக் கட்டுரையில் நாம் விளக்கமாகப் பதிவிட்ட சதியை ஹிப் ஹாப் தமிழன் உறுதி செய்துள்ளார். இந்த மாணவர்ப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=zJWQvLT9Ks0

ஹிப் ஹாப் தமிழனை நம்பாதீர்கள் போராட்டத்தைத் தொடருங்கள் என்று ஹிப் ஹாப் தமிழனைப் பழித்து தீய சக்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர். இந்த சக்திகளின் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் பெயரில் sagayam ias in Madurai என்ற முகநூல் பக்கத்தில் கீழ்கண்ட பதிவுகள் பதிவாகியிருந்தது.

//இனி எந்த நடிகரையும்,செலிபிரட்டிகளையும் உள்ளே அனுமதிக்காதீர்கள் ...
அது நடிகர் விவேக்கோ,ஹிப் ஹாப் ஆதியோ, யாராக இருந்தாலும் சரி ...உங்களுடன் சரிசமமாகப் பேச அனுமதிக்காதீர்கள் .//
////காளையை,காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியவுடன்,நீங்கள் வெற்றியடைந்தவர்களாவீர்கள் ...
அதுவரை மார்க்கண்டேய கட்ஜுவோ,நடிகர்களோ உங்களுள் புகுந்து குழப்ப விடாதீர்கள் ...//


Sagayam image 1

 

இதைவிடக் கொடுமை, ஜல்லிக்கட்டிற்காக 10 ஆண்டுகள் தொடர்ந்து போராடிவரும் திரு,இராஜசேகர், திரு. கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோருக்காக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை மக்களுக்காக மக்கள் ஆரம்பித்த போராட்டம் என்று பிரச்சினையைத் தூண்டிவிடுகிறார்.

Sagayam image 2

 

இதனால் சகாயத்திற்கு என்ன லாபம் ?

 37.5 % தமிழர்கள் சகாயத்தை முதல்வராக வரவேண்டும் என்று விரும்புவதாக கிறிஸ்தவ லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=byaH4KA85L4

மாணவர்கள் போராடினார்கள்! பலர் குளிர் காய்கிறார்கள்!

மாணவர்கள் பெருமளவில் ஏறு தழுவுவார்கள், ஆநிரை காப்பார்கள், பண்பாட்டு தூதுவர்களாக மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போராட்டம் இன்று தீய சக்திகளின் ஊடுருவலால் நாட்டைச் சிதைக்கும் பாதைக்குச் சென்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களே! விடுதலைப் போருக்கு வித்திட்டவர்களின் வழித்தோன்றல் நாம்! அரசியல் சூழ்சிகளுக்கு இரையாகி நம் தமிழனத்திற்கு இழிவைத் தேடித் தரலாமா?

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம்!

 

ஜல்லிக்கட்டைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள:  http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/712-2017-01-21-06-17-30

Read 14031 times
Rate this item
(12 votes)
Last modified on Monday, 23 January 2017 17:44

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment